←
Mithun Cinemas🕺🏻10,833 posts
Mithun Cinemas🕺🏻 avatar

Mithun Cinemas🕺🏻

@LearnEasy11

MOVIE REVIEW | MOVIE SUGGESTIONS AND RECOMMENDATIONS

◷ Joined June 2020▧ 2,775 Photos and videos
Mithun Cinemas🕺🏻 avatar
Mithun Cinemas🕺🏻@LearnEasy11·Nov 16

#Ranabaali (Tamil/Telugu) – ஒரு கொடூரமான வரலாற்றை கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார்கள்! Rating : 2.25/5 #Netflix #Taxiwala, #ShyamSinghaRoy படங்களை இயக்கிய ராகுல் சங்கிரித்யன், 1876–78 காலகட்டத்தில் நடந்த மெட்ராஸ் பஞ்சத்தை மையமாக வைத்து இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார். அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்திய மக்கள் அனுபவித்த கொடுமைகளையும், ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளையும் மிகவும் தத்ரூபமாகக் காட்டியிருக்கிறார். செழிப்பாக இருந்த ஊர்களில்கூட பஞ்சத்தை ஏற்படுத்தி, மக்களை அடிமைப்படுத்திய பிரிட்டிஷ் ஆட்சியின் திட்டங்களைப் படத்தில் காட்டிய விதம் அருமை. பார்க்கும்போதே மனதைப் பாதிக்கும் பல காட்சிகள் படத்தில் இருக்கின்றன. குறிப்பாக, ஒரு கைப்பிடி சோற்றை எடுத்த சிறுவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனை மனதை உலுக்குகிறது. அன்றைய மெட்ராஸ் பஞ்சத்தின் உண்மையான புகைப்படங்களை ஆங்காங்கே பயன்படுத்தியிருப்பது படத்திற்கு இன்னும் யதார்த்தமான உணர்வைக் கொடுக்கிறது. கதை நன்றாக இருந்தாலும், சில காட்சிகள் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தாலும், படத்தில் சில குறைகளும் இருக்கின்றன. குறிப்பாக, அளவுக்கு அதிகமான வன்முறைக் காட்சிகள் ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகின்றன. விஜய் தேவரகொண்டாவின் நடிப்பும் சில இடங்களில் கொஞ்சம் ஓவராகத் தெரிகிறது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் 5 நிமிடங்கள் ஓடும் படத்தை இன்னும் கொஞ்சம் எடிட் செய்திருக்கலாம். சில காட்சிகளைத் தவிர்த்திருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும். விஜய் தேவரகொண்டாவின் அறிமுகக் காட்சியிலேயே ஒருவரின் தலையை வெட்டி கையில் எடுத்துக்கொண்டு நடந்து வருகிறார். அதற்குத் தனியாக ஒரு அறிமுகப் பாடலும் வேறு! தலை வெட்டுவது, கை, கால்களைத் துண்டிப்பது என படம் முழுவதும் வன்முறைக் காட்சிகள் அதிகம். இதற்கிடையில் முத்தக் காட்சிகள், வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுக்கும் காட்சி என அதிர்ச்சியளிக்கும் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை. அதுமட்டுமில்லாமல், ஹீரோ படம் முழுவதும் பேசும் சில பஞ்ச் வசனங்களும் அளவுக்கு அதிகமாக இருக்கின்றன. இவ்வளவு விஷயங்கள் தேவையா என்ற எண்ணம் சில இடங்களில் வருகிறது. வில்லன் கதாபாத்திரத்தைப் பொறுத்தவரை, #TheMummy படத்திலிருந்து வில்லனையே அழைத்து வந்து இப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், அந்தக் கதாபாத்திரம் பெரிய அளவில் வலுவாக இல்லை. படத்தில் இன்னும் அழுத்தமான வில்லன் கதாபாத்திரமாக உருவாக்கியிருக்கலாம். ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்கம் இரண்டுமே செம. அந்தக் காலகட்டத்தைக் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார்கள். குறிப்பாக, ஒவ்வொரு காட்சியிலும் கலை இயக்கத்தின் உழைப்பு நன்றாகத் தெரிகிறது. மொத்தத்தில்: ஒரு நல்ல வரலாற்றுக் கதையை எடுத்துக்கொண்டு, அதைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், தேவைக்கு அதிகமான வன்முறை, நீளமான திரைக்கதை, சில இடங்களில் ஓவர் ஆக்டிங் என இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் #Ranabaali இன்னும் சிறப்பாக வந்திருக்கும். #Ranabaali #VijayDeverakonda #RahulSankrityan #MovieReview #TeluguCinema x.com/Netflix_INSouth/status…

Post attachment
Mithun Cinemas🕺🏻 avatar
Mithun Cinemas🕺🏻@LearnEasy11·5h

#OM படத்தில், #Dhanush (பழனிவேல்) – #Sreeleela (ரோஜா) தம்பதியினரின் மகனாக #Dhanush (திருக்குமரன்) வருவது போல தெரிகிறது. ஆனால், இரண்டு தனுஷ்களுக்கும் இடையே தோற்றத்தில் வித்தியாசம் இருக்கிறது. ஒருவர் ருத்ராட்சம் அணிந்திருப்பது போலவும், மற்றொருவர் சிலுவை அணிந்திருப்பது போலவும் காட்டப்பட்டுள்ளனர். இதன் பின்னணியில் ஏதாவது சுவாரஸ்யமான ட்விஸ்ட் இருக்கிறதா? என்னுடைய கணிப்பு எந்த அளவுக்குச் சரியாக இருக்கிறது என்று படம் வெளியான பிறகு பார்க்கலாம்! 🤔

Post attachment
Gowtham Leo avatar
⟳ Mithun Cinemas🕺🏻 retweeted
Gowtham Leo@cinee_mazhaii_·7h

#InspectorRishi 2024-👺💥 ஒரு கண் பார்வையை இழந்த இன்ஸ்பெக்டர் ரிஷி மலைபகுதியில் உள்ள தேன்காடு கிராமத்தில் நடக்கும் தொடர் கொலைகளுக்கு பின்னால் உள்ள மர்மத்தைகண்டறிய செல்கிறார்.ஊர் மக்கள் வனரட்சியின் வேட்டை தான்னு சொல்ல ஹீரோவுக்கு நம்பிக்கையில்லை இதற்கடுத்து என்ன நடந்தது என்பதே கதை

Post attachment
Mithun Cinemas🕺🏻 avatar
Mithun Cinemas🕺🏻@LearnEasy11·7h

வழக்காடும் களம் தயாராகிவிட்டது! விவாதங்கள் விரைவில் ஆரம்பமாகப் போகின்றன! #SathyavanSavithiri படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது வரும் நவம்பர் 20 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சாவித்திரி தன் கணவனை மீட்டெடுப்பாளா? திரையில் காணத் தயாராகுங்கள்! Book Your Tickets Now! BookMyShow: bookmy.show/SathyavanSavithi… District: link.district.in/DSTRKT/rcmk… #SathyavanSavithiriFromNov20

Post attachment
Mithun Cinemas🕺🏻 avatar
Mithun Cinemas🕺🏻@LearnEasy11·9h

திருச்செந்தூர் அருகே கடற்கரையில் கரை ஒதுங்கிய லட்சக்கணக்கான மீன்கள்... அள்ளிச் செல்லும் பொதுமக்கள்..! @grok what is the reason

1:42
Mithun Cinemas🕺🏻 avatar
Mithun Cinemas🕺🏻@LearnEasy11·14h

#SathyavanSavithiri படத்திற்கு UA சான்றிதழ் கிடைத்துள்ளது! நீதிமன்றமே பரபரப்பாகக் காத்திருக்கிறது! இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் இந்தப் போராட்டத்தைக் காணலாம். #SathyavanSavithiri நவம்பர் 20 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில்! #SathyavanSavithiriFromNov20

Post attachment
Filmy Fanatic avatar
⟳ Mithun Cinemas🕺🏻 retweeted
Filmy Fanatic@FanaticFilmy·Nov 17

#FFMovieReview THE BODY (2026) [Tamil ❌] 🔞 🕰️ 8 episodes 📽️ Netflix 🎙️English 📃 Plot - 2004-ஆம் ஆண்டு ஹாலோவீன் இரவில், ஒரு கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த பெண்கள் மட்டுமே உள்ள ஒரு நடனக் குழுவின் ரகசிய விருந்தில் சக்திவாய்ந்த போதைப்பொருட்களை உட்கொண்டதால் அவர்களில்..⬇️

Post attachment
Mithun Cinemas🕺🏻 avatar
Mithun Cinemas🕺🏻@LearnEasy11·Nov 17

சத்தியவானைக் காப்பாற்றப் போராடும் சாவித்திரி! நீதிக்கான போராட்டம், விறுவிறுப்பான நீதிமன்ற வாதங்கள், எதிர்பாராத திருப்பங்கள் என ஒரு சுவாரஸ்யமான கதைக்களத்துடன் இன்னும் 3 நாட்களில் திரைக்கு வருகிறது! #SathyavanSavithiri நவம்பர் 20 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில்! #SathyavanSavithiriFromNov20

Post attachment