
ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து, தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடி, தனது சொத்துகள் அனைத்தையும் இழந்து, சிறைக் கொடுமைகளையும் அனுபவித்த ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் நினைவு நாளில், தமிழகம் முழுவதும் We The Leaders சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சுதேசிக் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கி, சுயசார்புச் சிந்தனையையும் நாட்டுப்பற்றையும் மக்களின் மனதில் விதைத்த வ.உ.சி. அவர்களின் தியாகத்தையும், தேசத்திற்கான பங்களிப்பையும் என்றும் போற்றுவோம்!







