←
Dr D.Ravikumar MP38,382 posts
Dr D.Ravikumar MP avatar

Dr D.Ravikumar MP

@WriterRavikumar

MA,BL,PhD . MP (Villupuram Constituency) 17&18th loksabha. Gen Sec VCK. Author,Translator, former Legislator (2006)youtube.com/user/writerRavik…

◷ Joined July 2009▧ 9,970 Photos and videos
The Telegraph avatar
⟳ Dr D.Ravikumar MP retweeted
The Telegraph@ttindia·Nov 17

61% of households surveyed in India spending over 20% more on essentials; PM Modi focused only on politics: @Jairam_Ramesh telegraphindia.com/india/61-…

Congress avatar
⟳ Dr D.Ravikumar MP retweeted
Congress@INCIndia·Nov 17

She belonged to him, and he belonged to her.

1:33
Thol. Thirumavalavan avatar
⟳ Dr D.Ravikumar MP retweeted
Thol. Thirumavalavan@thirumaofficial·Nov 17

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் 17.11.2026 அன்று நடைபெற்ற மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநில நிர்வாகக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : அரசியல் தீர்மானங்கள் 1. அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதற்கான இலக்கு! தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டில் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள், “ஆளுங்கட்சியாகப் பரிணமிப்போம் என்பதுதான் நம்முடைய அடுத்த இலக்கு” என்று முழங்கினார். தலைவரின் இந்த அரசியல் இலக்கை வென்றெடுத்து, அதை நிறைவேற்றும் வகையில் மகளிர் விடுதலை இயக்கம் தனது களப்பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். பெண்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டுதல், இயக்கத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துதல், மக்களிடையே கட்சியின் கொள்கைகளை கொண்டு சேர்த்தல் எனத் திட்டமிட்டுச் செயல்பட்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆளுங்கட்சியாகப் பரிணமிப்பதற்கான அரசியல் பயணத்தில் மகளிர் விடுதலை இயக்கம் மிகத் தீவிரமாக களப்பணியாற்றுவது என இந்த நிர்வாக குழு கூட்டம் உறுதியேற்கிறது. 2. அண்ணன் சீர் திட்டம்! தவெக தலைமையிலான தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அண்ணன் சீர் திட்டத்தை இந்த மாநிலச் செயற்குழு பாராட்டி வரவேற்கிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு ஆண்டு வருமான உச்சவரம்பாக ரூ.2.5 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் இத்திட்டத்தின் பயன்களைப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனை இந்த மாநில நிர்வாகக்குழு பாராட்டி வரவேற்கிறது. 3. மகளிர் இடஒதுக்கீடு! ஒன்றிய பாஜக அரசு மகளிர் இடஒதுக்கீட்டுக்கான சட்டத்தை நிறைவேற்றிய பிறகும், தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னரே அதை நடைமுறைப்படுத்தப் போவதாகக் கூறி வருகிறது. மகளிர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாமல் காலம் தாழ்த்துவதற்கு ஒன்றிய அரசு கூறும் சாக்குப்போக்காகவே இதைக் கருத வேண்டியுள்ளது. மகளிர் இடஒதுக்கீட்டைத் தொகுதி மறுசீரமைப்புடன் இணைக்கக் கூடாது என்றும், தற்போதுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இந்த மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது. மத்திய மற்றும் மாநில அமைச்சரவைகளில் பெண்களுக்கு உரிய அளவில் அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும். அரசின் முக்கியமான கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகார அமைப்புகளிலும் பெண்களின் பங்கேற்பும் பிரதிநிதித்துவமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என இந்த மாநில நிர்வாகக்குழு வலியுறுத்துகிறது. 4. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு எதிரான அவமதிப்பு! கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திருமதி பத்மஜா, ஐ.ஏ.எஸ் அவர்களிடம் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கண்ணியக்குறைவான முறையில் நடந்துகொண்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாகத் தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அந்தச் சட்டமன்ற உறுப்பினர் கண்ணியக்குறைவான முறையில் நடந்துகொண்டது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அவர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த மாநில நிர்வாகக்குழு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது. 5. பெண்களின் பாதுகாப்பு! தமிழகத்தில் பெண்கள், சிறுமிகள் மற்றும் குறிப்பாகத் தலித் பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சாதிய அடிப்படையிலான பாலியல் வன்முறைகள், பணியிடங்களில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்கள் ஆகியவற்றை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. இத்தகைய குற்றங்களைத் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நீதி கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கும், குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்படுவதற்கும் தேவையான சட்டங்களை வலுப்படுத்தி, அவற்றைத் திறம்படச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு பெண்களின் பாதுகாப்புக்காக அமைத்துள்ள ‘சிங்கப் பெண் படை’ இன்னும் தீவிரமாகச் செயல்பட்டு, பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று இந்த மாநில நிர்வாகக்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. (1/2)

Post attachmentPost attachmentPost attachment
M A Baby avatar
⟳ Dr D.Ravikumar MP retweeted
M A Baby@MABABYCPIM·Nov 17

The order of the Supreme Court bench suspending the sentences and granting bail to two of the 11 men convicted of gang rape and murders in the Bilkis Bano case, citing their prolonged incarceration, is shocking and reprehensible. The Court is yet to grant bail to youth activists who have been behind bars for years without trial, effectively as political prisoners, yet finds it appropriate to release convicts found guilty of the ghastliest of crimes. By the Court’s own admission, these are the same convicts who had abused the process of law to obtain remission from the Gujarat government in 2022, despite having been granted liberal furloughs and parole from time to time. The Supreme Court has delivered injustice. Bilkis Bano’s struggle for justice concerns every one of us. We stand with her.

Post attachment
Dr D.Ravikumar MP avatar
Dr D.Ravikumar MP@WriterRavikumar·Nov 16

மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் வரலாறும் அரசியலும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது நாட்டில் எத்தனைபேர் இருக்கிறார்கள் எனக் கணக்கிடும் புள்ளியியல் நடவடிக்கை மட்டுமல்ல அந்தக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களை வகைப்படுத்தி, அடுக்குகளை உருவாக்கி ஆட்சி செய்யும் அரசியல் நடவடிக்கையுமாகும். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சென்சஸ் எடுக்கும் நடைமுறை எப்போது ஆரம்பித்தது? அதற்கும் சாதிகளின் நிலைப்படுத்தலுக்குமான தொடர்பு என்ன? அந்த அதிகார விளையாட்டு சுதந்திரத்துக்குப் பிறகும் எப்படி தொடர்கிறது, இப்போதைய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் மூலம் பாஜக அரசு என்ன செய்யப்போகிறது? - இந்தக் கேள்விகளுக்கு விளக்கம் பெற இந்தத் தொகுப்பிலுள்ள கட்டுரைகளைப் படியுங்கள் 👇🏿

Post attachment
Thol. Thirumavalavan avatar
⟳ Dr D.Ravikumar MP retweeted
Thol. Thirumavalavan@thirumaofficial·Nov 16

இலங்கை யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசிய கட்சியின் நிறுவனரும், இலங்கையின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான போராளி எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களின் திருஉடலுக்கு மலர்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினேன்!

0:54
Thol. Thirumavalavan avatar
⟳ Dr D.Ravikumar MP retweeted
Thol. Thirumavalavan@thirumaofficial·Nov 16

இலங்கை யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசிய கட்சியின் நிறுவனரும், இலங்கையின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான போராளி எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களின் திருஉடலுக்கு மலர்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தி உரையாற்றினேன்!

11:19
Dr D.Ravikumar MP avatar
Dr D.Ravikumar MP@WriterRavikumar·Nov 16

Counting castes, questioning categories: The politics of caste enumeration D.Ravikumar “ The census must be approached with the objectives of annihilating caste, promoting equality and strengthening democracy, as emphasised by Dr B. R. Ambedkar. Achieving these objectives requires transparency in census methodology, a scientifically grounded approach to classification, the active participation of communities and democratic oversight mechanisms to scrutinise the political use of the data.” newindianexpress.com/opinion…

Dr D.Ravikumar MP avatar
Dr D.Ravikumar MP@WriterRavikumar·Nov 16

Counting castes, questioning categories: The politics of caste enumeration My article published in the portal of @NewIndianXpress “ A census intended to advance social justice must not become an instrument for reinforcing existing inequalities.” Read the article in the comments box 👇🏿

Dr D.Ravikumar MP avatar
Dr D.Ravikumar MP@WriterRavikumar·Nov 16

எஸ்சி எஸ்டி மாணவர்கள் போஸ்ட் மெட் ரிக் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கான வருமான வரம்பை உயர்த்தும் எனது கோரிக்கை ஒன்றிய சமூக நீதித்துறை அமைச்சர் பதில் == உயர்கல்வி பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் போஸ்ட் மெட் ரிக் ஸ்காலர்ஷிப் பெறுவதற்குத் தற்போதுள்ள குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு இரண்டரை லட்சம் என்பதை எட்டு லட்சம் என உயர்த்த வேண்டும் என விதி 377 இன் கீழ் நான் நாடாளுமன்றத்தில் பேசினேன். அதற்கு இன்று ஒன்றிய சமூக நீதித்துறை அமைச்சர் திரு வீரேந்திர குமார் அவர்கள் மின்னஞ்சல் மூலம் பதில் அனுப்பியுள்ளார். “ மதிப்பிற்குரிய முனைவர் து.ரவிக்குமார் அவர்களே, எஸ்சி எஸ்டி சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான ' போஸ்ட் மெட் ரிக் உதவித்தொகைத் திட்டங்களின்' (Post-Matric Scholarship Schemes) கீழ், தகுதிக்கான ஆண்டு குடும்ப வருமான உச்சவரம்பை ரூ. 2.50 லட்சத்திலிருந்து ரூ. 8.00 லட்சமாக உயர்த்துவது தொடர்பாக, நாடாளுமன்றத்தில் விதி 377-ன் கீழ் தாங்கள் எழுப்பிய விவகாரம் குறித்து இந்த கடிதத்தை எழுதுகிறேன். ஆண்டு குடும்ப வருமான உச்சவரம்பை ரூ. 2.50 லட்சத்திலிருந்து ரூ. 8.00 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற தங்களது முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டது. தற்போது நடைமுறையில் உள்ள வருமான அளவுகோல், தகுதியுள்ள பயனாளிகளைக் கண்டறிவதற்கான இத்திட்டத்தின் கட்டமைப்பில் ஒரு முக்கியமான காரணியாகும். எனவே, வருமான உச்சவரம்பில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமானால், அது இத்திட்டத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து மதிப்பீடு செய்ய வேண்டியது அவசியமாகும். கல்வி உதவித்தொகைத் திட்டங்களின் கீழ் இலக்கு வைக்கப்பட்ட நிதி உதவியை வழங்குவதன் மூலம், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வியைப் பெறுவதை ஊக்குவிப்பதில் அரசு உறுதியாக உள்ளது. வாழ்த்துகளுடன். தங்கள் உண்மையுள்ள, (டாக்டர் வீரேந்திர குமார்) என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்சாதியினர் இட ஒதுக்கீடு ( EWS) பெறுவதற்கான வருமான வரம்பும், பிற்படுத்தப்பட்டோருக்கான கிரீமி லேயரை தீர்மானிப்பதற்கான வருமான வரம்பும் எட்டு லட்சமாக இருக்கும் சூழலில், எஸ்சி எஸ்டி மாணவர்கள் படிப்பு உதவித்தொகைக்கான வருமான வரம்பை உயர்த்துவதற்கு பாஜக அரசு மறுக்கிறது. இந்த வருமான உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு சுமார் 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதெனத் தெரிகிறது. எஸ்சி எஸ்டி சமூகத்தினர் உயர்கல்வி பெறக்கூடாது என்பதுதான் பாஜக அரசின் கொள்கையா? - ரவிக்குமார் எம்.பி

Post attachment
Dr D.Ravikumar MP avatar
Dr D.Ravikumar MP@WriterRavikumar·Nov 16

திருமதி சோனியா காந்தி அவர்களின் நூலில் தமிழ்நாட்டைப்பற்றிய ஒரு பதிவு : “ தமிழ்நாட்டில் நாங்கள் மேற்கொண்ட பயணத்தின்போது, ​​பல்வேறு கிராமங்களில் வாகனத்தை நிறுத்தி ராஜீவ் மக்களை சந்தித்தார். அவ்வாறான கிராமம் ஒன்றில், ஜீப்பைச் சுற்றித் திரண்டிருந்த மக்களிடம் பேசுவதற்காக ராஜீவ் கீழே இறங்கினார். நான் ஜீப்பிற்குள் இருந்தபடி கவனித்துக் கொண்டிருந்தபோது, ​​சற்று தொலைவில் நின்றிருந்த ஒரு முதிய பெண்மணி என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். ராஜீவ் மீண்டும் ஜீப்பிற்குள் ஏறியபோது, ​​அந்தப் பெண்மணி அருகில் வந்து, “நீ யார்?” என்று கேட்பது போல சைகை செய்தார். நான் ராஜீவிற்கு நெருக்கமாக நின்று, அந்தப் பெண்ணைப் பார்த்துக் கண்ணடித்தேன். அதைப் புரிந்துகொண்ட அவர், “ஆஹா, இப்போதுதான் புரிகிறது!” என்பது போலத் தலையை அசைத்து, பெரிதாகச் சிரித்தார். அவர் உரக்கச் சிரிக்க, நானும் அவருடன் சேர்ந்து சிரித்தேன். வெவ்வேறு உலகங்களைச் சேர்ந்த, வெவ்வேறு மொழிகளைப் பேசும் இரு பெண்கள், வெறும் சைகைகள் மூலம் ஒருவருக்கொருவர் கருத்துகளைப் பரிமாறிக்கொண்ட அந்த நெகிழ்ச்சியான தருணம், இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளது.” ( From Sonia Gandhi: BELONGING- A Journey of Love, Alfred A. Knof, New York,2026)

Post attachment
Dr D.Ravikumar MP avatar
Dr D.Ravikumar MP@WriterRavikumar·Nov 15

ஈழத்தில் போராளி சிவாஜிலிங்கம் மறைவு: __________________________________ ஈழ விடுதலை அரசியல் சக்திகளுக்கு நேர்ந்த பேரிழப்பு! மகத்தான போராளிக்கு எமது செம்மாந்த வீரவணக்கம்! ________________________________ தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) மேனாள் முன்னணி தலைவர்களுள் ஒருவரும் இன்றைய தமிழ்த்தேசியக் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவருமான போராளி சிவாஜிலிங்கம் அவர்களின் மறைவு பெரும் துயரமளிக்கிறது. டெலோ இயக்கத்தின் தலைவர் திருமிகு சிறீ சபாரத்தினம் அவர்களின் மறைவுக்குப் பின்னர் அந்த இயக்கத்தை வழிநடத்தியவர்களுள் இவர் முதன்மையானவர். ஆயுதப் போராட்டப் பாதையிலிருந்து விலகி நாடாளுமன்ற சனநாயகத்தை ஏற்று தேர்தல்பாதையில் அவ்வியக்கம் பயணித்த காலத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்போடு இணைந்து பணியாற்றியவர். தேர்தலில் பங்கேற்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் அதிபருக்கான தேர்தலில் வேட்பாளராகவும் போட்டியிட்டவர். தற்போது வல்வெட்டித்துறை நகர்மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றி வந்தார். கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக ஆயுதப் போராட்டம், அறவழிப் போராட்டம், தேர்தல் அரசியல் என அல்லும் பகலும் அயராது உழைத்த அவரது உடல் நலம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு, சர்க்கரை நோய்க்கு ஆளாகி சிறுநீரகம் செயலிழந்து பல ஆண்டுகளாக அவதியுற்றார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அண்மையில் நடந்தது. எனினும், இன்று நாம் அவரை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்ச் சமூகம் ஒரு மகத்தான போராளியை இழந்து நிற்கிறது. தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களில் பெரும்பாலானோருடன் அவருக்கு நல்லிணக்கமான நட்புறவு உண்டு. குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகளுடன் அவர் மிகவும் நெருக்கமான நல்லுறவைப் பேணினார். கடந்த 2002 ஆம் ஆண்டு முதன்முதலாக 'மானுடத்தின்தமிழ்க் கூடல்' நிகழ்வுக்காக ஈழத்துக்குச் சென்ற சூழலில், கொழும்பு விமான நிலையத்தில் எமது குழுவை வரவேற்க வந்திருந்த அவர் எனக்கு அறிமுகமானார். அந்தப் பயணத்தில் எங்களோடு கடைசிவரை இருந்தவர்களுள் அவரும் ஒருவர். அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்களைச் சந்திக்க சென்றபோதும் அனைத்துலகச் செயலகம் வரை எம்மோடு வந்தவர். வல்வையிலுள்ள அண்ணன் பிரபாகரன் அவர்களின் சிதைந்து கிடந்த இல்லத்தைக் காணப்தற்கு எம்மை அழைத்துச் சென்றவர். ஈழத்தந்தை செல்வா காலத்திலிருந்து 2002 வரையிலான ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றை, பயணத்தின் இடையிடையே எங்களுக்கு விவரித்தவர். அவருடைய நினைவாற்றலும் ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்று ஞானமும் எமக்கு வியப்பை அளித்தன. தனது இறுதி மூச்சுவரை ஈழவிடுதலைக்கான அரசியலில் உறுதியாக இருந்தவர். இன்று அவர் நம்மோடு இல்லை என்பது பெருங்கவலை அளிக்கிறது. அவரது இழப்பு ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும். தனிப்பட்ட முறையில் என்மீது பேரன்பைச் செலுத்தியவர். அவரது மறைவு எனக்கு நேர்ந்த இழப்பாகவே உணர்கிறேன். தமிழீழ விடுதலைக்காகவும் தமிழ்த் தேசிய அரசியல் எழுச்சிக்காகவும் அவர் ஆற்றிய பங்களிப்பை நெஞ்சிலே இருத்தி அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். இந்தப் பெருந்துயர் சூழலில், அவரை இழந்து வாடும் கும்பத்தினருக்கும் ஈழவிடுதலை அரசியல் சக்திகளுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவண : தொல்காப்பியன் திருமாவளவன், நிறுவனர்-தலைவர், விசிக.

Post attachment
Dr D.Ravikumar MP avatar
Dr D.Ravikumar MP@WriterRavikumar·Nov 14

பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளில் இதை வாசியுங்கள் நேரு எழுதிய உலக சரித்திரம் நூல் குறித்த எனது அறிமுகம் 👇🏿(1/2)

Post attachmentPost attachmentPost attachmentPost attachment
Dr D.Ravikumar MP avatar
Dr D.Ravikumar MP@WriterRavikumar·Nov 14

நேற்று தலைவர் @thirumaofficial அவர்களின் தலைமையில் நடைபெற்ற மண்டலச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 👇🏿

Post attachmentPost attachmentPost attachment
Dr D.Ravikumar MP avatar
Dr D.Ravikumar MP@WriterRavikumar·Nov 13

குழந்தைகள் தினவிழா விழுப்புரம் மாவட்டம் சிந்தாமணி அரசு மேல் நிலைப்பள்ளியில் இன்று அரசு சார்பில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட மேற்பார்வை அலுவலர், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ உள்ளிட்டோருடன் பங்கேற்று கேக்குகளை வழங்கினேன். விசிக மாவட்டச் செயலாளர் காணை வளவன், நிர்வாகிகள் கிட்டு , ஞானவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Post attachmentPost attachmentPost attachment