←
CPIM Tamilnadu61,536 posts
CPIM Tamilnadu avatar

CPIM Tamilnadu

@tncpim

Official Handle of Communist Party of India (Marxist) Tamilnadu State Committee

◷ Joined March 2014▧ 33,996 Photos and videos
CPIM Tamilnadu avatar
CPIM Tamilnadu@tncpim·Jul 11

அன்றாட அரசியல் நிகழ்வுகள், போராட்டங்களின் செய்திகள், இயக்கங்களின் அறிவிப்புகள் என அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள சி.பி.ஐ(எம்) தமிழ்நாடு அதிகாரப்பூர்வ WhatsApp சேனலில் இணைந்திருங்கள்! #CPIM #CPIMTamilNadu #Whatsapp whatsapp.com/channel/0029Va4…

Post attachment
CPIM Tamilnadu avatar
CPIM Tamilnadu@tncpim·13h

மார்க்ஸ் சொன்னது நடக்கிறது... கம்யூனிசத்தைக் கண்டு நடுங்கும் ஆர்.எஸ்.எஸ்! #Kallakurichi | கலெக்டர் புகார் கொடுத்தால்தான் நடவடிக்கையா? சென்னையில் நடப்பது வெறும் பேட்ச் ஒர்க் மட்டுமா? உள்ளாட்சி அமைப்புகள் எதற்கு? கருப்பு சட்டை போட்டால் போதுமா? வீதிக்கு வராதது ஏன்? கம்யூனிஸ்டுகளை மிரட்டவும் முடியாது; விலைக்கு வாங்கவும் முடியாது! கூட்டணி தர்மம் என்றால் தவறுகளை ஆதரிப்பதா? நீதிபதியின் வேலை பாவம் புண்ணியம் பார்ப்பதா? | நீதித்துறைக்குள் நுழையும் சாதிய, மதவெறிப் பார்வை | அரசியலமைப்புச் சட்டம் சொல்வது என்ன? #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி | #CPIM மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா பங்கேற்கும் விவாதம்! #CPIM #KarlMarx #ChennaiCorporation #ChennaiFloods #KallakurichiMLA #Communism #RSS #GRSwaminathan #IndianConstitution #TNPolitics #TVK #DMK #ADMK #ModiGovt #LeftPolitics More : youtu.be/XhNbAnWfGqU

2:51
CPIM Tamilnadu avatar
CPIM Tamilnadu@tncpim·17h

மலேசியாவில் சர்வதேச தமிழ் வரலாற்று ஆய்வு மாநாடு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பங்கேற்க ஒன்றிய அரசு அனுமதி மறுப்பு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!!

Post attachment
CPIM Tamilnadu avatar
CPIM Tamilnadu@tncpim·17h

#Aiks36thconference – ல் தோழர் அசோக் தவாலே அகில இந்திய தலைவராகவும், தோழர் விஜூ கிருஷ்ணன் அகில இந்திய பொதுச் செயலாளராகவும், தோழர் புஷ்பேந்திர தியாகி அகில இந்திய பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்!

Post attachment
CPIM Tamilnadu avatar
CPIM Tamilnadu@tncpim·17h

பதிவுகளை நீக்கலாம், இணையத்தை முடக்கலாம்; மக்களின் கோபத்தை ‘டெலிட்’ செய்ய முடியாது பழங்காலக் கதைகளில் ஒரு மன்னன் வருவான். தன் நாட்டில் யாரும் அழக்கூடாது, யாரும் பசியோடு இருக்கக்கூடாது, எல்லோரும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று கட்டளையிடுவான். உடனே அமைச்சர்கள் அழுகுரல்களை அடக்கி, பஞ்சத்தில் வாடியவர்களை ஊருக்கு வெளியே துரத்திவிட்டு, அரண்மனை வாசலில் மட்டும் சிரிப்பொலியை ஒலிக்கவிடுவார்கள். “என் ஆட்சியில் நாடே சுபிட்சமாக இருக்கிறது!” என்று மன்னன் மார்தட்டிக்கொள்வான். ஆனால் அரண்மனைச் சுவர்களுக்கு வெளியே புகைந்து கொண்டிருந்த மக்களின் கோபம் ஒரு நாள் பெரு நெருப்பாக வெடித்து, அவனது பொய்யான பிம்பத்தையும் சிம்மாசனத்தையும் சேர்த்தே சாம்பலாக்கியது. இன்று நாம் வாழ்வது மன்னராட்சிக் காலத்தில் அல்ல; ஆறங்குல ஸ்மார்ட்போன் வழியாக உலகையே உள்ளங்கையில் வைத்திருக்கும் தகவல் தொழில்நுட்ப யுகத்தில். ஆனால் ஆட்சியாளர்களின் மனநிலை மட்டும் அந்தப் பழைய மன்னனைப் போலவே இருப்பது தான் நகைமுரண். மக்கள் கேள்வி கேட்பார்கள்; ஆட்சியாளர்கள் பதில் சொல்ல வேண்டும்; தவறுகள் நடந்தால் திருத்திக்கொள்ள வேண்டும். இதுதான் மக்களாட்சியின் அடிப்படை. ஆனால், மோடி தலைமையிலான ஒன்றிய அரசோ, “கேள்வி கேட்பவர்களின் வாயை அடைத்துவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும்” என்ற விசித்திரமான தர்க்கத்தைக் கையிலெடுத்துள்ளது. - தோழர் எம்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர், #CPIM More: shorturl.at/l0rd3

Post attachment
CPIM Tamilnadu avatar
CPIM Tamilnadu@tncpim·18h

தமிழ்நாட்டில் மதவெறி அரசியலை முன்னெடுக்க தொடர்ந்து முயற்சி | மதவெறி அரசியலை மதுரை மக்கள் மிக நுட்பமாக எதிர்கொள்ள வேண்டும்! - தோழர் @SuVe4Madurai எம்.பி, மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #Madurai #Thirupparankundram #Maduraimp MORE : youtu.be/qJpENTxxmj4

1:51
CPIM Tamilnadu avatar
CPIM Tamilnadu@tncpim·18h

விவசாயிகள் – தொழிலாளர் போராட்டங்கள் பிரிக்க முடியாதவை வேளாண் நெருக்கடிக்கும் கார்ப்பரேட் சுரண்டலுக்கும் எதிராக விவசாயிகளும் தொழிலாளர்களும் ஒன்றுபட்டுப் போராட வேண்டும். இந்திய விவசாயிகளை அணி திரட்டிய சங்கத்தின் 90 ஆண்டுகால வரலாறு, நாட்டின் விவசாய ஜனநாயகப் போராட்ட வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாதது. அப்போராட்டங்கள் வெறும் பொருளாதார இயக்கங்கள் அல்ல; நிலப்பிரபுத்துவம், சமூக ஒடுக்குமுறை, பாகுபாடு, சுரண்டல் ஆகியவற்றுக்கு எதிரான சவால்கள். - தோழர் எளமரம் கரீம், பொதுச் செயலாளர், #CITU #FarmersAndWorkers #WorkersUnity #FarmersRights More: shorturl.at/BBSpP

Post attachment
CPIM Tamilnadu avatar
CPIM Tamilnadu@tncpim·20h

ஏகாதிபத்தியத்திடம் அடகு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நியூசிலாந்துடன் மோடி அரசு செய்துகொள்ளும் வர்த்தக ஒப்பந்தங்கள் விவசாயிகளுக்காக அல்ல, கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்காகவே அமெரிக்க விவசாயிக்கு ரூ.22 லட்சம் மானியம் கிடைக்கிறது; அங்கு சராசரி நில உடைமை 470 ஏக்கர், இங்கோ 5 ஏக்கருக்கும் குறைவு. அவர்களுடன் நம் விவசாயிகள் எப்படிப் போட்டியிட முடியும்? இறக்குமதி வரியை நீக்கச் சொல்கிறார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்; அது நடந்தால் விலை கிடைக்காமல் நம்விவசாயிகள் நொடிந்து போவார்கள். மோடி அரசு நம் விவசாயிகளை ஏகாதிபத்தியத்திடம் அடகு வைக்கிறது. - தோழர் @VijooKrishnan பொதுச் செயலாளர் #AIKS #CPIM #IndiaUSTradeDeal #IndiaEUTradeDeal #TradeAgreements #FarmersProtest

Post attachment
CPIM Tamilnadu avatar
CPIM Tamilnadu@tncpim·20h

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 36-ஆவது மாநாடு - நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவசாயிகள் விளைவிக்கும் அனைத்துப் பயிர்களுக்கும் உற்பத்திச் செலவுக்கு மேல் 50 சதவீதம் (சி2 + 50%) என்ற அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் இயற்ற வேண்டும் என அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 36-ஆவது மாநாடு ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தியுள்ளது. சம்யுக்த கிசான்மோர்ச்சாவின் நவம்பர் 26 நாடு தழுவிய போராட்டத்தில் பங்கேற்கவும், சிஐடியுவின் டிசம்பர் 1–3 தில்லி முற்றுகைக்கு முழு ஆதரவு அளிக்கவும் மாநாடு முடிவு செய்துள்ளது. #CPIM #AIKS36thConference #MSP #C2Plus50 #November26Protest

Post attachment
CPIM Tamilnadu avatar
CPIM Tamilnadu@tncpim·20h

சுதந்திர போராட்ட வீரரும், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 90வது நினைவு நாளான இன்று சென்னை துறைமுகம் நுழைவு வாயிலில் உள்ள அவரது உருவ சிலைக்கு #CPIM மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் #CPIM #வஉசிதம்பரனார் #வஉசி

Post attachmentPost attachment
CPIM Tamilnadu avatar
CPIM Tamilnadu@tncpim·21h

குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்டம் இயற்றுக! “நாட்டில் இப்போது நடைமுறையில் இருப்பது ‘மோதானி’ மாடல். அதாவது, அதானி, அம்பானி மற்றும் வெளிநாட்டுக் கார்ப்பரேட்டுகளுக்குக் கொள்ளையடித்துக் கொடுக்கும் கொள்கை”. 2014 தேர்தல் அறிக்கையில் சுவாமிநாதன் குழுப் பரிந்துரைப்படி சி2 + 50% ஆதரவு விலை வழங்குவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு மோடி ஏமாற்றிவிட்டார். தில்லி விவசாயிகள் போராட்டத்தின் முதன்மைக் கோரிக்கையும் இதுதான்; போராட்டம் முடிவுக்கு வந்தபோது அதை ஏற்றுக்கொண்ட அரசு, பின்னர் பின்வாங்கியது. ஆதரவு விலை கிடைக்காததாலேயே மோடி ஆட்சியில் 5 லட்சம் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், குத்தகை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விதை, உரம், பூச்சிக்கொல்லி விலைகள் உயர்ந்துகொண்டே போகின்றன.நெருக்கடியிலிருந்து மீள ஆதரவு விலைக்குச் சட்ட அங்கீகாரம் தேவை. தோழர் விஜூ கிருஷ்ணன், பொதுச் செயலாளர் #AIKS #CPIM #MSPLa #MinimumSupportPrice #C2Plus50 #DelhiFarmersProtest

Post attachment
CPIM Tamilnadu avatar
CPIM Tamilnadu@tncpim·21h

தஞ்சைத் தரணி தந்த மகத்தான கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் தோழர் கோ.வீரய்யன் தோழர் கோ.வீரய்யன் ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் தன்னுடைய அர்ப்பணிப்புமிக்க உழைப்பின் காரணமாக கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். தமிழக சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டு கிராமப்புற மக்களின் குரலை சட்டமன்றத்தில் ஒலித்தவர். தமிழக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் நலன்காக்க பல்வேறு போராட்டங்களுக்கு தலைமை யேற்றவர். தமிழக விவசாயம் குறித்து முழுவதுமாக அறிந்தவர். வெண்மணி கொடுமை, கிராமப்புற விவசாய இயக்கம் உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதியவர். ஒரு கம்யூனிஸ்ட் என்ற கம்பீரத்தோடு வாழ்ந்த தோழர் கோ.வீரய்யன் நினைவு தினம் இன்று. #CPIM #ComradeVeerayan #AIKS #Communist #TNpolitics

Post attachment
CPIM Tamilnadu avatar
CPIM Tamilnadu@tncpim·21h

ஏகாதிபத்திய எதிர்ப்பின் அடையாளமாகவும் தொழிலாளி வர்க்கத்தை திரட்டுவதற்கான வடிவமாகவும் திகழ்ந்த வ.உ.சிதம்பரனார் நினைவு நாள் இன்று. #SwadeshiSteamNavigation #VOCRemembranceDay #WorkersRevolution

Post attachment
CPIM Tamilnadu avatar
CPIM Tamilnadu@tncpim·Nov 17

திருப்பரங்குன்றத்தில் ஆண்டாண்டு காலமாகக் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வரும் அதே இடத்தில் இந்த ஆண்டும் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, "மதுரையின் மரபாம் மக்கள் ஒற்றுமையைப் பாதுகாப்போம்... மதவெறி சக்திகளை முறியடிப்போம்" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரையில் 16.11.2026 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் #CPIM மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி, #CPIM மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநகர் மாவட்டக் குழுச் செயலாளர் மா. கணேசன், புறநகர் மாவட்டக் குழுச் செயலாளர் கே. ராஜேந்திரன், மேயர் (பொ) நாகராஜன், மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.கே. பொன்னுத்தாய், த. செல்லக்கண்ணு, எஸ். பாலா மற்றும் மேற்கு ஒன்றாம் பகுதிக் குழுச் செயலாளர் பி. வீரமணி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

Post attachmentPost attachmentPost attachmentPost attachment
CPIM Tamilnadu avatar
CPIM Tamilnadu@tncpim·Nov 17

கிருஷ்ணகிரி மாவட்ட குழு சார்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி நகராட்சி ஓசூர் மாநகராட்சி ஊத்தங்கரை பேரூராட்சி நாகோஜனஹள்ளி பேரூராட்சி தேன்கனிக்கோட்டை பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு #CPIM சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில குழு உறுப்பினர் தோழர் ஆர் பத்ரி, மாவட்ட செயலாளர் சி சுரேஷ், மாவட்ட செயற்குழு, மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்ளிட்டு திரளான தோழர்கள் பங்கேற்றனர். #CPIM #Cuddalore #CorporationOffice #Chidambaram #Virudhachalam #MunicipalOffice

Post attachmentPost attachmentPost attachmentPost attachment